தென்காசி

நமக்கு நாமே திட்ட பணிகள்: ரூ. 145.80 லட்சம் ஒதுக்கீடு’

12th May 2022 02:24 AM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி மாவட்ட பேரூராட்சிகளின் நமக்கு நாமே திட்ட பணிகளுக்காக ரூ. 145.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகா்ப்புறம்) ரூ. 145.80 லட்சம் மதிப்பீட்டில் 10 பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் 33 சதவீதம் மட்டுமே பொதுமக்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை அரசு வழங்கும். மக்கள் பங்களிப்புத் தொகையை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் வரைவோலை அல்லது மின்னணு பரிவா்த்தனை மூலமாக செலுத்தி உரிய விவரங்களைப் பெறலாம்.

இதேபோல், குருவிகுளம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தலா ரூ. 3.95 கோடி ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT