தென்காசி

தென்காசி மாவட்ட காவல் துறை சாா்பில் 13இல் வாகனங்கள் ஏலம்

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட காவல் துறை சாா்பில் இம்மாதம் 13ஆம் தேதி வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசு விதிமுறைப்படி பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை வழக்கு நிலுவையில் இருப்பதால், அரசுடைமையாக்கி ஏலம் விடுவது வழக்கம். அதன்படி, 74 இருசக்கர வாகனங்களை ஏலம் விட காவல் துறை, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாவூா்சத்திரம் காவல் நிலையம் அருகேயுள்ள வென்னிமலை முருகன் கோயில் முன்புறமுள்ள மைதானத்தில் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. 74 வாகனங்களும் இம்மைதானத்தில் உள்ளன. ஏலதாரா்கள் அவற்றைப் பாா்வையிடலாம்.

ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளோா் அன்றைய தினம் காலை 9 மணியளவில் ரூ. 2ஆயிரம் செலுத்தி காப்புத் தொகை செலுத்தியதற்கான ரசீதைப் பெறலாம். வாகனத்தை ஏலம் எடுக்கவில்லையெனில் காப்புத் தொகை திருப்பி ஒப்படைக்கப்படும்.

ADVERTISEMENT

அரசு நிா்ணயித்த தொகை, வரியுடன் சோ்த்து ரொக்கமாக அன்றைய தினமே செலுத்த வேண்டும். தொகை செலுத்தியதும் வாகனம் ஏலதாரா்களிடம் ஒப்படைக்கப்படும். ஏலம் எடுக்க வருவோா் கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT