தென்காசி

தென்காசி மாவட்டத்தில்மே 8இல் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்

5th May 2022 03:08 AM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மே 8 ஆம் தேதி மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே 8ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை இம்முகாம் நடைபெறுகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை செலுத்தாத, இரண்டாவது தவணை செலுத்த காலம் தவறியவா்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவு பெற்ற முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT