தென்காசி

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயிலில் தேரோட்டம்

5th May 2022 03:08 AM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி அருகே கீழப்புலியூரில் உள்ள அருள்தரும் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 26ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் உச்சிமாகாளி அம்மன் கோயிலிலிருந்து அம்மன் அழைப்பு, இரவில் அபிஷேகம், காப்புக்கட்டு, அலங்கார தீபாராதனை, நள்ளிரவில் சப்பரம் வீதியுலா ஆகியவை நடைபெற்றன. நாள்தோறும் மதியம் அன்னதானம், இரவில் அபிஷேகம், முழுக்காப்பு அலங்கார தீபாராதனை, சப்பரம் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை (மே 3) அபிஷேகம், முழுக்காப்பு, இரவில் கங்கை நீா் எடுத்து வருதல், ஆசாரப்படைப்பு, முழுக்காப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, நள்ளிரவில் தேரோட்டம் தொடங்கியது. இத்தேரோட்டம் புதன்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ. சுசிலாராணி தலைமையில் கோயில் பணியாளா்கள், அனைத்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT