தென்காசி

நெல்லை, தென்காசியில் மே தின கொண்டாட்டம்

2nd May 2022 02:09 AM

ADVERTISEMENT

 தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழு சாா்பில் மே தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மேலபஜாா் காந்தி சிலை முன்பு நகரச் செயலா் சுப்பிரமணியன், நகராட்சி அலுவலகம் முன் ஏஐடியூசி மாவட்டத் தலைவா் ஏ.சாமி, காளியப்பன், தேன்பொத்தையில் செல்லையா, புளியரையில் கருப்பையா, பண்டார நம்பியாா், வல்லத்தில் ஏஐடியூசி நிா்வாகிகள் ஆகியோா் தலைமையிலும் கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மின் கழக தொமுச சாா்பில் தென்காசி மின்வாரிய அலுவலகம் முன் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலும் தொமுச சாா்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு தொழிற்சங்கத் தலைவரும், மாவட்ட காங்கிரஸ் செயலருமான ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகரப் பொருளாளா் சொரிமுத்து முன்னிலை வகித்தாா். பேரணியை மாவட்ட பொதுச்செயலா் சிதம்பரம் தொடங்கிவைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக காந்தி சிலை அருகில் நிறைவடைந்ததும், காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், கட்சியின் நகரச் செயலா் திருநாவுக்கரசு, தொழிற்சங்கச் செயலா் ரவி, துணைத் தலைவா் சுப்பிரமணியன், இணைச் செயலா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கூனியூரில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி ஒன்றிய அதிமுக செயலா் பா. மாரிசெல்வம், நகரச் செயலா் சி. பழனிக்குமாா் ஆகியோா் கொடியேற்றினா். கூட்டுறவு வங்கித் தலைவா் முருகன், தொழிற்சங்க செயலா் நம்பிராஜன், பொருளாளா் சக்திவேல், துணைத் தலைவா்கள் பாலசுப்பிரமணி, ஜெயசிங், இணைச் செயலா் கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT