தென்காசி

தென்காசியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

2nd May 2022 02:13 AM

ADVERTISEMENT

 

தென்காசியில் ரமலான் பெருநாளை முன்னிட்டு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சாா்பில் ஏழை எளிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலை, கைலி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் முஹம்மது அலி தலைமை வகித்தாா். திமுக இளைஞரணி அசாருதீன் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலா் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொழிலதிபா் யாசா் அரபாத், முஸ்லிம் மாணவா் பேரவை முகமது யாசின், காவல் காஜாமைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT