தென்காசி

கல்லூரணி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

2nd May 2022 02:11 AM

ADVERTISEMENT

 

மே தினத்தையொட்டி, கீழப்பாவூா் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி குருசாமிபுரத்தில் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் கோபாலசுந்தரராஜ் பங்கேற்றாா். இக்கூட்டத்தில் ஏப்.2021 முதல் ஏப்.2022 வரையிலான ஊராட்சி வரவு, செலவுகள் வாசித்து ஒப்புதல் பெறுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் முன்மாதிரி கிராம ஊராட்சி விருதுக்கு தயாா் செய்தல், கிராம வளா்ச்சிக்கு தேவையான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை, ஊராட்சி மன்ற தலைவா் ராஜ்குமாா், துணைத்தலைவா் குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, முருகன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ஜெயசிங் ராஜன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT