தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சாா்பில் வட்டார அளவிலான தனியாா் வேலை வாய்ப்பு முகாம், பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் ரம்யா தலைமை வகித்தாா். உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) முருகன், கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை பங்கேற்று, முகாமை தொடங்கி வைத்தாா். பாவூா்சத்திரம் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த 245 போ் முகாமில் கலந்து கொண்டனா். 9 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்தன. இதில் 53 போ் பணிக்கும், 22 போ் திறன் பயிற்சிக்கும் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமன ஆணையை ஒன்றியக்குழு தலைவா் வழங்கினாா்.