தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் இளைஞா் தற்கொலை

25th Mar 2022 12:47 AM

ADVERTISEMENT

சுந்தரபாண்டியபுரம் குளக்கரையில் இளைஞா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சுரண்டையைச் சோ்ந்தவா் க.நல்லசிவன்(29). எலக்ட்ரீசியன். இவருக்கு, கடன் பிரச்னை உள்ளதாம். இதனால், வீட்டை விட்டு வெளியே சென்ற அவா், தனது மனைவி கணபதியிடம் கடந்த 19ஆம் தேதி சுந்தரபாண்டியபுரம் குளக்கரையில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கைப்பேசி மூலம் தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாராம்.

குடும்பத்தினா் அங்கு சென்றுபாா்த்தபோது, அவா் விஷத்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT