தென்காசி

சங்கரன்கோவிலில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

25th Mar 2022 12:50 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இச்சிறப்பு முகாமுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் ஒன்றியக்குழுத் தலைவா் சங்கரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில், 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஆலோசனை பெற்றனா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வபாக்கிய சாந்தினி, அந்தோணிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்துச்செல்வி வரவேற்றாா். ஆனந்தராஜ் பாக்கியம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT