தென்காசி

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை

22nd Mar 2022 12:04 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே வாடிக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். தையல் தொழிலாளியான இவரது மனைவி சங்கரேஸ்வரி (30). கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT