தென்காசி

ஆலங்குளத்தில் ரூ. 1.45 கோடி நகைக் கடன் தள்ளுபடி

22nd Mar 2022 12:04 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் நகைக் கடன் தள்ளுபடி திட்டம் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து 352 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான நகைகளை திருப்பி அளித்தாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் செல்லபாண்டியன், கிளை மேலாளா் பழனியப்பன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், நகர திமுக செயலா் நெல்சன், ஒன்றிய திமுக முன்னாள் செயலா் பூல்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT