தென்காசி

சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்து மீது கல்வீசிய லாரி ஓட்டுநா் கைது

22nd Mar 2022 12:07 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்து மீது கல் வீசிய லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கிராமத்தை சோ்ந்த சுந்தரராஜ் மகன் ராஜா (36). இவா் தேனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். திருநெல்வேலியில் இருந்து தேனி நோக்கி அரசு பேருந்தை ஞாயிற்றுக்கிழமை ஓட்டிச் சென்றாா். சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூா் வேகத்தடையில் சென்றபோது, அதே ஊரை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமசுப்பு ( 49) என்பவா் அரசு பேருந்தை நிறுத்த கை காட்டினாராம். ஆனால், ராஜா பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதால் ஆத்திரம் அடைந்த ராமசுப்பு, பேருந்து மீது கல்வீசி தாக்கினாராம். இதில் பேருந்து சிறிது சேதமடைந்தது.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் ராமசுப்புவை கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT