தென்காசி

சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில்மேலாண்மைக் குழுக் கூட்டம்

22nd Mar 2022 12:06 AM

ADVERTISEMENT

செங்கோட்டை ஒன்றியம், சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ப.சட்டநாதன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் லதா முன்னிலை வகித்தாா். முதுகலை ஆசிரியா் கோமதி விநாயகம் வரவேற்றாா். பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

ஆசிரியா்கள் சல்மா பீவி, கருப்பையா, சுஜித், ராஜமலா், ரேணுகா தேவி, பிரேமா, விஜயாள், முத்துலட்சுமி, முப்புடாதி, ஆழ்வாா் அம்மாள், கனகா, சண்முகநாதன், ஆய்வக உதவியாளா் அழகு மாரி மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா்.

ஆசிரியா் கிறிஸ்டோபா் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT