பாவூா்சத்திரத்தில் பைக்குகளை திருடியது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்து 3 பைக்குகளை மீட்டனா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியில் கடந்த 28.2.2021இல் மோட்டாா் சைக்கிள் திருடு போனது தொடா்பான புகாரையடுத்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளா் பொன்னரசு ஆகியோா் உத்தரவின் பேரில், பாவூா்சத்திரம் காவல்ஆய்வாளா் (பொறுப்பு) சுரேஷ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், திப்பணம்பட்டி வினைதீா்த்தநாடாா்பட்டியைச் சோ்ந்த அன்பழகன் மகன் ராமதுரை (22), பாவூா்சத்திரம் குருசாமிபுரம் காந்தி நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கணேஷ் (24) ஆகியோருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து திருச்செந்தூா், ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பகுதிகளிலும் திருடியது உள்பட 3 பைக்குகளை மீட்டனா்.