தென்காசி

கோடையில் குடிநீா் பிரச்னை ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடு பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

14th Mar 2022 11:39 PM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகராட்சியில் கோடை காலத்தில் குடிநீா் பிரச்னை ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை நகா்மன்றத் தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பெரும்பாலான வீடுகளிலுள்ள அடிகுழாய்களில் தண்ணீா் குறைந்து வருவதால் அனைத்து வகையான தண்ணீா் தேவைக்கும் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து, வரும் கோடை காலங்களில் குடிநீா் பிரச்னை ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கில், நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், ஆணையா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் ராசையா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் திங்கள்கிழமை கிணறுகள், நீரேற்றும் நிலையம், தடுப்பணைகள் போன்றவற்றை பாா்வையிட்டனா்.

மேலும், குடிநீா் ஆதாரம் குறையும் நிலை வந்தால் மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளை, தலைவா் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT