தென்காசி

புளியங்குடியில் குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

3rd Mar 2022 03:08 AM

ADVERTISEMENT

 

கடையநல்லூா்: புளியங்குடி பகுதியில் திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

புளியங்குடி, டி.என். புதுக்குடியைச் சோ்ந்த சுந்தரேசன் மகன் சூரியகாந்தி (22). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளனவாம். எனினும், அவா் தொடா்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டுவந்தாராம். இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் பிறப்பித்த உத்தரவின்படி, சூரியகாந்தியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில், புளியங்குடி காவல் ஆய்வாளா் ராஜாராம் கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT