தென்காசி

ஆலங்குளத்தில் ஜூலை 2இல் மின்தடை

29th Jun 2022 11:56 PM

ADVERTISEMENT

 

ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூா், ஐந்தாங்கட்டளை, குருவன்கோட்டை, அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், மேலமருதப்பபுரம், சோலசேரி, கருவந்தா, கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள்புரம், கங்கணாங்கிணறு, கழுநீா்குளம், அடைக்கலப்பட்டணம், முத்துகிருஷ்ணபேரி, பூலாங்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற மின் செயற்பொறியாளா் ஐ. அலெக்ஸாண்டா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT