தென்காசி

ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற இளைஞர கைது

29th Jun 2022 03:22 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கனேரி வனப் பகுதியில் இளைஞா்கள் சிலா் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஊத்துமலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீஸாரை கண்டதும் இளைஞா்கள் ஓட்டம் பிடித்தனராம். அவா்களில் நெட்டூா் அம்மன் கோயில் தெரு சரவணன் மகன் மகாராஜனை(19) போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா விற்றது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் போலீஸாா் தப்பி ஓடிய அதே ஊரை சோ்ந்த முத்து மகன்கள் சுப்புக்குட்டி(40), முப்புடாதி(35) ஆகியோரை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT