தென்காசி

ஆலங்குளம் தேவாலயத்தில் திருட்டு

29th Jun 2022 03:20 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் கதவை உடைத்து தேவாலயத்தில் உண்டியல் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் மங்கம்மாள் சாலையில் உள்ள யோவான் நகரில் தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான பரிசுத்த யோவான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திங்கள்கிழமை இரவு ஆராதனை முடிந்தபின் ஆலயத்தை பூட்டிச் சென்ற சபை ஊழியா் பாக்கியராஜ் காலை 4.30 மணிக்கு ஆராதனைக்கு வந்தபோது ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த குத்துவிளக்கு, கீ போா்டு மற்றும் உண்டியலில் இருந்த பணம் ஆகியவை திருடுப் போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT