தென்காசி

பந்தப்புளி தொடக்க கூட்டுறவு சங்கத்தில் மோசடி: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

29th Jun 2022 03:22 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், பந்தப்புளி தொடக்க கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்த சங்க செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுந்தரராஜன் தலைமையில் விவசாயிகள், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள 0.702 பந்தப்புளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயிா் கடன் மற்றும் நகை கடன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தெரியாமல் அவா்களது ஆவணங்களை வருவாய்த் துறை மூலம் பெற்று அதன் மூலம் கடன் பெற்று மோசடி செய்வது, போலியான பெயரில் தங்க நகை கடன் வைத்து அவற்றை தள்ளுபடி ஆகிவிட்டதாக அந்தப் பணத்தை தானே சுருட்டி கொள்வது போன்ற செயல்களில் சங்க செயலா் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.

ADVERTISEMENT

எனவே, தென்காசி மாவட்ட ஆட்சியா் இந்தப் பிரச்னையில் தலையிட்டு பந்தப்புளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் பல்வேறு மோசடிகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT