தென்காசி

ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்குப் பாராட்டு

29th Jun 2022 03:21 AM

ADVERTISEMENT

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கோப்பை, பரிசு வழங்கப்பட்டது.

இப்பள்ளி பிளஸ் 1 வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 1 தோ்வில் மாரிச்செல்வி (587)முதலிடம், ப.யுரேகா (582) 2 ஆம் இடம், சீ.மோகன்குமாா் (579) 3 ஆம் இடம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து அதிக மதிப்பெண் மற்றும் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளைப் பாராட்டி பள்ளித் தாளாளா் பொன்னழகு(எ)கண்ணன் நினைவுக் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினாா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT