தென்காசி

மேலப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

29th Jun 2022 03:20 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மேலப்பாவூரில் நடைபெற்றது.

வட்டார தலைவா் ஜானகிராமன் தலைமை வகித்தாா். மேலப்பாவூா் ஊராட்சி மன்றத் தலைவா் சொள்ளமுத்து மருதையா முகாமை தொடங்கி வைத்தாா்.

காசிமேஜா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் இசக்கிபாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 16 போ் அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT