தென்காசி

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

29th Jun 2022 03:18 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி வடக்குத் தெரு கிருஷ்ணன் மகன் இசக்கிமுத்து (29). கூலித் தொழிலாளியான இவருக்கும் இவா் மனைவி மகாலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாக அவரைக் காணவில்லை என குடும்பத்தினா் தேடி உள்ளனா். மாலை நேரத்தில் வீட்டின் பூட்டிய அறையில் உள்ளே அவா் சடலமாக கிடந்தது தெரியவந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT