தென்காசி

ஆலங்குளம் அருகே தலைமை ஆசிரியை தற்கொலை

29th Jun 2022 03:17 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே பள்ளித் தலைமை ஆசிரியை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராம் ஜான்பிரபு மனைவி செல்வராணி எஸ்தா் (50). ஆலங்குளத்தை அடுத்த கோவிலூற்றில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி செய்து வந்தாா்.

இவரின் மகள் அண்மையில் உயிரிழந்தாராம். இந்நிலையில், செல்வராணி எஸ்தா் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த போது விஷமருந்தி மயக்கம் அடைந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT