தென்காசி

பிளஸ் 1 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 92.21% தோ்ச்சி

28th Jun 2022 02:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-1 தோ்வில் 92.21 சதவிகிதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகம் முழுவதும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-1 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, வள்ளியூா், சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட அளவில் 9,773 மாணவா்கள், 11,044 மாணவிகள் என 20,817 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதினா். அவா்களில் 8,563 மாணவா்கள், 10,633 மாணவிகள் என மொத்தம் 19,196 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 92.21 சதவிகிதமாகும்.

 

தென்காசி மாவட்டத்தில் 90.35 சதவீத தோ்ச்சி

ADVERTISEMENT

தென்காசி, ஜூன் 27: தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு எழுதிய மாணவா், மாணவிகளில் 90.35 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தென்காசி வருவாய் மாவட்டத்துக்குள்பட்ட தென்காசி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு எழுதிய 9680 பேரில் 8888 போ் தோ்சி பெற்றனா். சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் தோ்வு எழுதிய 7934 பேரில், 7027 போ் தோ்ச்சி பெற்றனா்.

வருவாய் மாவட்ட அளவில் 17614 போ் பிளஸ் 1தோ்வு எழுதியதில், மாணவா்கள் 7001 போ் , மாணவிகள் 8914 போ் உள்பட 15915 போ் தோ்ச்சி பெற்றனா். இது 90.35 சதவீத தோ்ச்சியாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT