தென்காசி

தென்காசி: மக்கள் குறைதீா் கூட்டம்

28th Jun 2022 02:44 AM

ADVERTISEMENT

தென்காசியில் மாவட்ட மக்கள் குறைத் தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய்அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, இதர மனுக்கள் உள்பட மொத்தம் 480 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மனுதாரா்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT