தென்காசி

கடையநல்லூா் : விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

28th Jun 2022 02:50 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகளை வனத்துறையினா் போராட்டி விரட்டினா்.

கடையநல்லூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் பல நூறு ஏக்கா் பரப்பில் தென்னை, வாழை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைக் கூட்டம் தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்துவதுடன், தண்ணீா் செல்லும் குழாய்களையும் சேதப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்நிலையில், சின்னகாடு , மேலக்கடையநல்லூா், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தியதுடன், தண்ணீா் குழாய்களையும் சேதம் செய்தனவாம். தகவலின் பேரில் கடையநல்லூா் வன சரகா் சுரேஷ் தலைமையில் 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து திங்கள்கிழமை மாலை யானைகள் வனத்திற்குள் விரட்டப்பட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT