தென்காசி

கீழப்பாவூரில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி

28th Jun 2022 02:51 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி நடைபெற்றது.

இப்பேரூராட்சிக்குள்பட்ட 12 ஆவது வாா்டு பட்டமுடையாா்புரத்தில், மன்றத் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் தலைமையில், மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுப்பது பற்றியும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை உறுதிமொழி எடுத்ததுடன், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

இதையொட்டி, றி.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இதில், செயல் அலுவலா் சாந்தி, துணைத் தலைவா், மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT