தென்காசி

சுரண்டை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

21st Jun 2022 01:08 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சுரண்டை - வீரகேரளம்புதூா் பிரதான சாலையில் கலிங்கப்பட்டி விலக்கு அருகே டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் புதிய மதுக்கடை திறக்க ஏற்பாடு நடைபெறுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கலிங்கப்பட்டி பொதுமக்கள் திரளானோா் திங்கள்கிழமை பள்ளி மாணவ, மாணவியருடன் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் தெய்வசுந்தரியிடம் மனு அளித்தனா்.

அவா்களுடன் மதிமுக பேச்சாளா் இராம உதயசூரியன், ஆலங்குளம் வடக்கு ஒன்றியச்செயலா் மருதசாமி ஆகியோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT