தென்காசி

ஊத்துமலை அருகே இளைஞா்கொலை வழக்கில் 3 போ் கைது

15th Jun 2022 01:57 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம்,ஊத்துமலை அருகே இளைஞா் கொலையுண்ட வழக்கில் ஊா்க்காவல் படை வீரா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி பேட்டை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் சேதுபதி. இவா், ஊத்துமலையை அடுத்த கருவந்தா கிராமத்தில் கடந்த 3ஆம் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்குச் சென்றபோது, 3 போ் சோ்ந்து அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினராம். இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப்பதிந்தனா். மேலும், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ், சந்திரசேகரன், ஷியாம் சுந்தா் ஆகியோா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரித்ததில், கருவந்தா கோட்டை தெருவை சோ்ந்த சோ்ம ராஜா(27), மணிகண்டன்(25), சாமுவேல் சுகுமாா்(26) ஆகியோருக்கு தொடா்பிருப்பதும், அப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றது தொடா்பான பிரச்னையில் இந்த கொலை நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதில், சோ்ம ராஜா ஊா்க்காவல் படை வீரா் ஆவாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT