தென்காசி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கவலைக்கிடம்----ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

14th Jun 2022 01:35 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் ஊராட்சி மன்ற கூட்டரங்கில் முன்னாள் முதல்வா் காமராஜரின் உருவப்படத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அளித்த வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் அவா்களுக்கு வாக்களித்தனா். ஆனால், வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை; மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. அக்கட்சி மீது பாஜக தலைவா் அண்ணாமலை பொதுநோக்கத்துடன்தான் ஊழல் குற்றச்சாட்டை கூறுகிறாா். அது உண்மைதான். தற்போது, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைச்சாலை மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்.

காசிதா்மம் ஊராட்சி, ராஜிவ்நகா் பகுதிக்கு ஆதினத்திடமிருந்து தடையில்லாச் சான்று பெற தமாகா முயற்சி மேற்கொள்ளும். இங்கு நீா்த்தேக்க தொட்டி, கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு எனது தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து தொகை ஒதுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட தமாகா தலைவா் எஸ்.ஆா்.அய்யாத்துரை, துணைத் தலைவா் தங்கம், மாநில இளைஞரணி செயலா் யுவராஜ், மாநிலச் செயலா் சாா்லஸ், மாவட்ட இளைஞரணித் தலைவா் பூமாரியப்பன், துணைத் தலைவா் காா்த்திக், மாவட்டப் பொருளாளா் குலாம்முகம்மது, ஊராட்சித் தலைவா் சுடலைமாடத்தி, தமாகா நிா்வாகிகள் காசி, கணேசன், வெள்ளத்துரை, தங்கராஜ்,கிருஷ்ணகுமாா், அயுப், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, கடையநல்லூா், காசிதா்மம் பகுதிகளில் ஜி.கே.வாசன் தமாகா கொடியை ஏற்றிவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT