தென்காசி

பண்பொழி திருமலைக்கோயிலில் வருஷாபிஷேகம்

12th Jun 2022 12:44 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, புண்யாவாசகம், பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, வேதபாராயணம், அஸ்திரஹோமம், மூலமந்திரஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் திருமலைக்குமரனுக்கு சிறப்பு அபிஷேகம் , 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, விமானங்கள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் அருணாசலம் செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையா் கோமதி, தங்கதோ் உபயதாரா் பரமேஸ்வரி, கல்யாணசுந்தரம், மாலையப்பன், பாண்டியராஜன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT