தென்காசி

சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்

12th Jun 2022 12:44 AM

ADVERTISEMENT

 

புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி அருள்மிகு ஸ்ரீசொக்கலிங்க சுவாமி திருக்கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் பிரமோற்சவ திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதியுலா நடைபெற்றது.

விழாவின் 9ஆம் திருநாளான சனிக்கிழமை காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவத்தைத் ,தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதன்திருமலைக்குமாா், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா,துணைத் தலைவா் அந்தோணிசாமி, அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் சித்துராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெங்கட்ராமன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT