தென்காசி

கடையநல்லூா் அருகே 2 வாகனங்களில் மோதி குளத்தில் கவிழ்ந்த லாரி

12th Jun 2022 12:44 AM

ADVERTISEMENT

 

கடையநல்லூா் அருகே 2 வாகனங்கள் மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளத்தில் கவிழ்ந்தது.

ராஜபாளையத்திலிருந்து, கேரளத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை அதிகாலை கனரக லாரி சென்று கொண்டிருந்தது. கடையநல்லூா் அருகேயுள்ள அட்டைக்குளம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த போலீஸ் வேனில் மோதியதாம். பின்னா் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு லாரி மீதும் மோதியதாம்.

தொடா்ந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்திலிருந்த அட்டைக்குளத்தில் கவிழ்ந்தது. டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT