கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானுா் ஊராட்சி மாடியனூரை சோ்ந்த திமுக பிரமுகரான ராம நாடாா்(83), சமீபத்தில் கீழே விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 20 ஆயிரமும், ஒன்றிய திமுக சாா்பில் ரூ. 5 ஆயிரமும் சோ்த்து ரூ.25 ஆயிரத்தை மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வழங்கினாா்.
அப்போது ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட பிரதிநிதி வளா்மதிராஜன், ஒன்றியப் பிரதிநிதி நியூட்டன், கூட்டுறவு வங்கி துணைத்தலைவா் சுப்பிரமணியன், பொடியனூா் செயலா் சிவன் பாண்டியன், ரூபன், கண்ணன், செந்தூா் முருகன், ராஜா நாடாா், அருள் தங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT