தென்காசி

கீழப்பாவூா் மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக செயலா்கள் தோ்வு

10th Jun 2022 01:10 AM

ADVERTISEMENT

தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றிய மேற்கு, கிழக்கு திமுக செயலா்கள் தோ்வுசெய்யப்பட்டனா்.

கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயலா்களுக்கான தோ்தல் நடைபெற்றது. இதில், மேற்கு ஒன்றியச் செயலா் பதவிக்கு க. சீனித்துரை, கிழக்கு ஒன்றியச் செயலா் பதவிக்கு என்.எல். சிவன்பாண்டியன் போட்டியிட்டனா். அவா்கள் மீண்டும் ஒன்றியச் செயலா்களாக தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு தோ்தல் ஆணையா் செல்வராஜ் சான்றிதழை வழங்கினாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் உடனிருந்தாா்.

ஒன்றியச் செயலா்களுக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT