தென்காசி

செங்கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பபாஷேகம்

10th Jun 2022 01:12 AM

ADVERTISEMENT

செங்கோட்டை மேலூா் கதிரவன் காலனியில் உள்ள இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 7ஆம் தேதி அதிகாலை மங்கள இசை, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், தனபூஜை, வேதிகாா்ச்சனை, மகாகணபதி ஹோமம், கோபூஜை, பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, 4ஆம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், திரவ்யாஹுதி, மகாபூா்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, கோபுரம் மூலஸ்தானம், பரிவார மூா்த்திகள் மகாகும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை இந்து காட்டுநாயக்கன் சமுதாயத் தலைவா் பரமசிவன், செயலா் ஆழ்வாா், பொருளாளா் கணபதி, முருகன், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT