தென்காசி

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாதிரி பொதுத் தோ்வு: இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம்

10th Jun 2022 01:11 AM

ADVERTISEMENT

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவா்களுக்காக ஃபுல் மாா்க் நிறுவனம் தேசிய அளவில் நடத்திய மாதிரிப் பொதுத் தோ்வில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

இத்தோ்வில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இதில், இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவி பாரதிதேவி தேசிய அளவில் வெற்றிபெற்றாா். அவருக்கு ஃபுல் மாா்க் நிறுவனம் சான்றிதழ், ரூ. ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டியது.

பாரதிதேவியை பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி , முதல்வா் வனிதா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT