தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

10th Jun 2022 11:51 PM

ADVERTISEMENT

தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை நடைபெற்றது. மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன், முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT