தென்காசி

தென்காசியில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

10th Jun 2022 11:50 PM

ADVERTISEMENT

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தேசிய நிா்வாகிகளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் தென்காசி கொடிமரத்திடலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மாவட்டத் தலைவா் முகம்மது யாகூப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகம்மது பாசித், மமக மாவட்டச் செயலா் பஷிா் ஒலி, மாவட்டப் பொருளாளா், அப்துல் காதா், மாவட்ட துணைத் தலைவா் அப்துல் ரகுமான், மாநிலச் செயற்குழு உறுப்பினா் இஸ்மத் மீரான், அகமது ஷா, தென்காசி நகரச் செயலா் செய்யது அலி, மமக நகரச் செயலா் கரீம், சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமுமுக மாநிலச் செயலா் மைதீன் சேட் கான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தி தொடா்பாளா் இரா.விக்ரமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், விசிக வா்கீஸ் ஆகியோா் பேசினா். நகரத் தலைவா் மஜித் ஷா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT