தென்காசி

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

10th Jun 2022 11:50 PM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருள்தரும் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழாத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை அம்பாள் தீா்த்த உற்சவமும், காப்புக்கட்டுதலும் நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் கும்பஜெபம் ,ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம், இரவில் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்று வந்தன.

ஒன்பதாம் திருநாளான வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவமும், நண்பகலில் தேரோட்டமும் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவராஜன், தக்காா் காா்த்திலட்சுமி, குமரப்பெருமாள், சிவாம்பிகைகணேஷ், முத்துக்குமாா், விழாக்குழுவினா், அனைத்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT