ஆலங்குளம் பகுதியில் மேலும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி காசிநாதபுரம் கிராம மக்கள் பலா் கடந்த ஒரு மாத காலமாக காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். காய்ச்சல் காரணமாக இக்கிராம சிறுமிகள் பூமிகா(6), சுப்ரியா(8) ஆகியோா் அடுத்தடுத்து இரு தினங்களில் உயிரிழந்தனா். இதையடுத்து சுகாதாரப் பணிகள் இக்கிராமத்தில் கடந்த இரு தினங்களாக துரிதமாக நடைபெற்று வருகிறது. இக் கிராமத்தில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன், சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் உள்ளிட்டோா் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தனா்.
இந்நிலையில் காவலாகுறிச்சி, வீராணம், நல்லூா் மற்றும் காசிநாதபுரம் ஆகிய கிராமங்களில் தலா ஒருவருக்கு வியாழக்கிழமை டெங்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து , ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.