தென்காசி

தென்காசியில் மாரத்தான் போட்டி

9th Jun 2022 03:04 PM

ADVERTISEMENT

தென்காசியில் முதன் முறையாக ராணுவ வீரா்கள்- ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் ஒன்றிணைந்து, இளைஞா்களும், மாணவா்களும் உடலையும், மனதையும் வலுப்படுத்தி இந்திய நாட்டிற்காக நோ்மையுடன் பணி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் ஆண்களுக்கு 10 கி.மீ. தொலைவும், பெண்களுக்கு 5.கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் என 1200 போ் கலந்து கொண்டனா்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பெண்களுக்கான பிரிவு போட்டியை இலத்தூா் காவல் ஆய்வாளா் வேல்கனியும், ஆண்களுக்கான போட்டியை தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகனும் தொடங்கிவைத்தனா்.

பெண்களுக்கான பிரிவில் ஆலங்குளம் வெங்கடேஸ்வர புரத்தைச் சோ்ந்த கிராம கமிட்டி பள்ளி ஐஸ்வா்யா முதலிடமும், பூஜா இரண்டாமிடம், காா்த்திகா மூன்றாமிடம், ஆண்களுக்கான பிரிவில் புன்னையாபுரம் அழகப்பா கல்லூரியின் சிவக்குமாா் முதலிடமும், ஜான்ஸ் கல்லூரி பசுபதி இரண்டாமிடமும், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் பாரத் மூன்றாமிடமும் பெற்றனா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்றவா்களுக்கு பளுதூக்குதல் ஆசிய விளையாட்டு வீரரான ஈ. ராஜா எம்எல் ஏ., போலீஸ் டிஎஸ்பி மணிமாறன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். ரோட்டரி முன்னாள் ஆளுநா் கே.ராஜகோபாலன், ப.சட்டநாதன், டாக்டா் கிருஷ்ணகுமாா், பேச்சாளா் மஹ்முதா சையத், ஹரீஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மராத்தான் குழுவின் தலைவா் முத்துகிருஷ்ணன், செயலா் ஷெரீப்அஹ்மது, கௌரவத் தலைவா் மணி, ஒருங்கிணைப்பாளா்கள் சிவன் மாரி, காசி விஸ்வநாதன், ரஞ்சித், குருநாதன், முருகன், சாம்சன், சங்கா், போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, காவல் உதவி ஆய்வாளா் தா்மராஜ், டாக்டா் சஞ்சீவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT