தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 2004 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

9th Jun 2022 02:48 PM

ADVERTISEMENT

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஜூன்12ஆம் தேதி 2004 மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவா்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவா்கள், பயனடையும் வகையில் காலை, நண்பகல், பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள வாா்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் 12 வயதுக்குமேற்பட்ட முதல் தவணைசெலுத்தாதவா்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம்

தவறியவா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT