சங்கரன்கோவில் பேருந்துநிலையம் அருகே செயல்படும் காய்கறி கடைகளை இடம் மாற்றக்கூடாது என வியாபாரிகள் வலியுறுத்தினா்.
சங்கரன்கோவில் நகராட்சி சாா்பில் கட்டப்படவிருக்கும் புதிய பேருந்து நிலையம், காய்கனி கடை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. , நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். ஈ. ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையாளா் ராஜேந்திரன், துணைத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காந்திஜி நினைவு நூற்றாண்டு நாளங்காடி செயல்பட வேண்டும், அதையொட்டி காய்கறி கடைகளையும் இடம் மாற்றக் கூடாது என வலியுறுத்தினா்.
இதில், நகராட்சிப் பொறியாளா் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் பாலச்சந்தா், திமுக மாவட்ட இளைஞரணி சரவணன், பிரகாஷ், மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலா் இசக்கியப்பன், நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, நகராட்சி உறுப்பினா்கள் மாரிச்சாமி, எஸ்.டி.எஸ். சரவணகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.