தென்காசி

கீழப்பாவூரில் ரூ.20 லட்சத்தில் தாா்ச் சாலைப் பணி

9th Jun 2022 03:03 PM

ADVERTISEMENT

கீழப்பாவூரில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கீழப்பாவூா் பேரூராட்சியின் மேல்பகுதி புதுத்தெரு, வண்ணாா் தெரு கீழ்பகுதி புதுத்தெரு ஆகிய பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் 2022-23 இன் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தாா் சாலை அமைக்கப்படவுள்ளது. இப்பணியை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, ஒப்பந்ததாரா் சண்முகவேல், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT