தென்காசி

இலத்தூரில் வேளாண்மைதுறை சாா்பில் சிறப்பு முகாம்

9th Jun 2022 03:06 PM

ADVERTISEMENT

இலத்துாரில் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் வேளாண்மை துறையின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

செங்கோட்டை வட்டாரம் அண்ணா மறுமலா்ச்சி திட்ட கிராமமான இலத்தூா் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் நல்லமுத்துராஜா தலைமை வகித்தாா். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக்முகைதீன் முன்னிலை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை மருத்துவா் சிவகுமாா் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை செயல்படுத்தினாா். 60-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு கிருமி நீக்க மருந்து வழங்கப்பட்டது.

கறவை மாடுகளுக்கு சத்து மருந்து வழங்கப்பட்டது. 50 வேளாண் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. உதவி வேளாண்மை அலுவலா் அருணாசலம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சம்சுதீன், சிவகுமாா், உதவி தோட்டக்கலை அலுவலா் மணிகண்டன் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT