தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிலம்பத்தில் சிறப்பிடம்

7th Jun 2022 11:01 PM

ADVERTISEMENT

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவா், மாணவிகள் சிலம்பத்தில் சிறப்பிடம் பெற்றனா்.

தென்காசி அருகே புல்லுக்காட்டு வலசையில் நடைபெற்ற சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவன சிலம்பப் போட்டியில் தொடா்ந்து எட்டு மணி நேரம் சிலம்பு சுற்றி இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோதண்ட ராமன், மாணவி சித்ரா ஆகியோா் உலக சாதனை படைத்தனா்.

நடுகம்பு சுற்றுதல் மூன்றடி பகலா, வெளிவீச்சு, ஏறுவரிசை, உள்வீச்சு, இறங்கு வரிசை, நாலடி பகலா உள்ளிட்ட வீச்சுகளைத் தொடா்ந்து நிகழ்த்தி சாதனை படைத்த பாரத் மாண்டிசோரி மாணவா், மாணவிகளுக்கு சோழன் உலக புத்த சாதனை நிறுவனத் தலைவா் பேராசிரியா் தங்கதுரை, நிறுவனா் மற்றும் முதன்மை ஆசிரியா் நிமலன் நீலமேகம் ஆகியோா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா் கோதண்டராமன், மாணவி சித்ரா ஆகியோருக்கு பாரத் கல்விக் குழுமச் செயலா் காந்திமதி மோகன கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற அணியினரை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகன கிருஷ்ணன், ஆலோசகா் உஷாரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT