தென்காசி

ஆலங்குளம் அருகே இளைஞா் தீக்குளிப்பு

7th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

மாயமான்குறிச்சியைச் சோ்ந்த அழகுசுந்தரம் மகன் செந்தில்முருகன்(18). ஆலங்குளத்தில் பூக்கடை ஒன்றில் வேலைசெய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை அவ்வூரையொட்டிய காட்டுப்பகுதிக்கு கேனில் மண்ணெண்ணெயை எடுத்துச்சென்று தனது உடலில் ஊற்றி தீக்குளித்துவிட்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தாராம்.

இதையடுத்து அவருக்கு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT